“அவசரநிலை பிரகடனம்” – மாமன்னரின் முடிவை எதிர்த்து வழக்கு பதிய முடியாது.!

Kuala Lampur High Court
Photo Courtesy : klbar.org.my

மன்னர் அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து யாரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்று கோலாலம்பூர் உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. (Kuala Lampur High Court)

மேலும் அவசரகால தொடர்பான விஷயங்களில் மன்னரின் முடிவே இறுதியானது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. (Kuala Lampur High Court)

இந்தியா – மலேசியா : புதுப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள்.!

அவசரநிலை பிரகடனம் குறித்தோ, அல்லது அவசரநிலை சட்டங்கள் குறித்தோ யாரும் எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடரமுடியாது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் மலேசியாவில் முன் எப்போதும் இல்லாத அளவில் தினமும் 3000-க்கும் அதிகமான மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து மலேசியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமத் ஷா அப்போது அறிவித்தார்.

பரவி வரும் பெருந்தொற்றை வேரடி மண்ணோட அகற்ற இந்த நடவடிக்கை அவசியம் என்று பலரும் கருதினர்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக தகவல் அப்போது வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த காலகட்டத்தில் தேர்தல் போன்ற விஷயங்கள் நிறைவேற்றப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram