‘அலட்சியப்போக்கு வேண்டாம்’ – எச்சரிக்கை விடுத்த கோலாலம்பூர் மாநகர் மன்றம்..!!

Public Parks
Photo Courtesy msm.com

மலேசியாவில், உள்ளூரில் கடந்த சில நாட்களாக கட்டுக்குள் இருந்து தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நாட்டில் உள்ளூர் தொற்று இருந்த நிலையில் பலரும் நிம்மதி பெருமூச்சு அடைந்த நிலையில் தற்போது மீண்டும் உள்ளூரில் தின்னும் தொற்றின் அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜோஹோர் மற்றும் சரவாக் பகுதிகளில் தொற்றின் அளவு அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் கடந்த மாதம் மீட்சிக்கான கட்டுப்பாடு அமலில் வந்த நிலையில் மலேசியாவில் பல இடங்களில் பூங்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அங்கு வருவோர் குறிப்பாக பெற்றோர் மிகவும் அலட்சியமான முறையில் நடந்துகொள்வதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் பூங்காக்கள் மூடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறு குழந்தைகளுக்கு தொற்று அதிவேகத்தில் பரவும் என்பது அறிந்தும் அவர்களை பூங்காக்களுக்கு அழைத்து வருகின்றீர்கள், உங்கள் பிள்ளைகளின் நாளின் உங்களுக்கு அக்கறை இல்லையா என்றும் மாநகர் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms