கேரளா : ஓடுபாதையில் விமானம் இறங்கியபோது இரண்டாக பிளந்து விபத்து – 17 பேர் பலி..!

Kerala Flight
Image tweeted by ANI

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் என்ற நகரில் இருக்கும் ஒரு இறைச்சி அங்காடியில் பிறந்தது கோவிட் 19 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு வைரஸ் தொற்று. அந்த ஒற்றை தொற்று இன்று 18,999,988 என்ற மாபெரும் எண்ணிக்கையை தாண்டி பல தொற்றாக மாறியுள்ளது, தற்போது உலக முழுக்க நிலவும் இக்கட்டான சூழல் காரணமாக சுற்றுலா மற்றும் இதர காரியங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிறநாடுகளில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் வழியில் பிற நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு இந்திய நேரப்படி 7.40 மணியவில் துபாயில் இருந்து கேரளா நோக்கி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தடுப்பு சுவற்றில் மோதிய இரண்டு துண்டானது.

இந்த கோர சம்பவத்தில் பல வருடம் அனுபவமிக்க விமானி உள்பட 17 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று கோழிக்கோடு பகுதியில் பலத்த மழை பெய்த காரணத்தால் விமானி இரண்டு முறை விமானத்தை இறக்க முயற்சித்தார் என்றும் மூன்றாம் முறை அவர் தரையிறக்க முயற்சித்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms