“டிசம்பர் 31 – புக்கிங் தொடங்கியது” : KL to திருச்சி – திருச்சி to KL சிறப்பு விமானம்.!

KL to Trichy Special Flight
Image tweeted by Air India Express

டிசம்பர் மாதம் 31ம் தேதி கோலாலம்பூர் முதல் திருச்சிக்கும் அதே சமயம் திருச்சி முதல் கோலாலம்பூருக்கும் சிறப்பு விமானம் இயக்கப்பட உள்ளது. (KL to Trichy Special Flight)

இதற்கான அறிவிப்பை தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 31ம் தேதி இரண்டு விமானங்கள் இரு முனை பயணமாக செயல்பட உள்ளது. (KL to Trichy Special Flight)

“மலேசியாவின் பனி இளவரசி” – ஸ்ரீ அபிராமியின் கனவுகள் நிறைவேறுமா.?

31ம் தேதி திருச்சியில் இருந்து காலை 9.45 மணிக்கும் அதே சமயம் கோலாலம்பூரில் இருந்து இரவு 9.45 மணிக்கும் இரண்டு விமானங்கள் புறப்பட உள்ளது.

இந்த சிறப்பு விமானத்திற்கான புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது. மேலும் விரைவில் அடுத்த ஆண்டிற்கான வந்தே பாரத் விமான பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க வந்தே பாரத் திட்டத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தற்போது தமிழகத்தில் இருந்து மலேசியாவிற்கும் அதே சமயம் அங்கிருந்து தமிழகத்திற்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு ஏற்கனவே அடுத்த மாதத்திற்கான விமான பட்டியல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் தொடங்கி கடந்த 7 மாத காலமாக வந்தே பாரத் சேவையை அண்டை நாடான இந்தியா செயல்படுத்தி வருவது குறிப்படத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram