கோலாலம்பூர் to திருச்சி – “அனைத்து புதன்கிழமைகளிலும் விமான சேவை”

KL to Trichy Flights
Image tweeted by Air India Express

கோலாலம்பூர் முதல் தமிழகம் செல்லும் வந்தே பாரத் விமானங்கள் (நவம்பர் மாதம்) விரைவில் முடிவடைய இருக்கின்றன. (KL to Trichy Flights)

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் திருச்சி ஆகிய இரு நகரங்களுக்கு மலேசியாவில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. (KL to Trichy Flights)

“அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் மட்டுமே பதிவு செய்யலாம்” – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.

ஏற்கனவே சென்னைக்கான இந்த மாதத்திற்கான வந்தே பாரத் சேவை முடிந்துவிட்டது. மேலும் வரும் 30ம் தேதி கோலாலம்பூரில் இருந்து திருச்சி வரும் விமானமே இம்மாதத்திற்கான கடைசி சேவை.

அதே சமயம் மக்களின் வேண்டுகோளை ஏற்று அடுத்த மாதம் அதிக அளவில் விமானங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 2ம் தேதி தொடங்கி, அம்மாதம் முழுவதும் அனைத்து புதன்கிழமைகளிலும் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமான சேவை அளிக்கப்படவுள்ளது.

2, 9, 16, 23, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 6 விமானங்கள் தமிழகத்தின் திருச்சிக்கு இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல டிசம்பர் 3ம் தேதி முதல் 17 வரை மூன்று வியாழக்கிழமைகளிலும் தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு விமானங்கள் கோலாலம்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.

மேலும் விமானங்கள் குறித்த பல தகவல்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. (KL to Trichy Flights)

இந்நிலையில் நேற்று தமிழகத்தை நீவர் புயல் தாக்கிய நிலையில் சென்னை பன்னாட்டு விமான நிலையம் மூடப்பட்டது.

மேலும் சென்னை முழுவது மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் புயல் அபாயம் நீங்கியுள்ள நிலையில் மீண்டும் சேவை தொடங்கியுள்ளது.

இன்று காலை முதல் சென்னை விமான நிலையம் முழு செயல்பாட்டில் வந்துள்ளது. மேலும் இன்று மதியம் 12 மணி முதல் மெட்ரோ சேவையும் மீண்டும் தொடங்கியுள்ளது.  \

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram