KL முதல் டெல்லி வரை – “154 பயணிகளுடன் புறப்பட்டது இந்த மாதத்திற்கான கடைசி விமானம்”

KL to New Delhi
Image tweeted by India in Malaysia

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 2020 வரை சொந்த நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக சென்று சிக்கியுள்ள மக்களை மீட்க எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இலங்கை, வியட்நாம், நியூஸிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோயின் தாக்கம் வலுபெற்றே வருகிறது என்பது வேதனை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : “கட்டுப்பாடு மீறல் : ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 32 பேர் கைது..?” – பாதுகாப்பு அமைச்சர்..!

இந்நிலையில் பிற நாடுகளில் உள்ள மக்களை வந்தே பாரத் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி தாயகம் அழைத்து செல்கிறது இந்திய அரசு. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மலேசிய அரசின் உதவியுடன் இங்குள்ள இந்திய மக்களை இந்தியாவின் கொச்சி, டெல்லி, சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு அழைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 13ம் தேதிக்கு பிறகு மீண்டும் 18ம் தேதி முதல் மலேசியா முதல் இந்தியா வரையிலான விமான சேவை தொடங்கியுள்ளது. நேற்று இந்திய அமைச்சர் ஹாதீப் சிங் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இதுவரை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 13.5 லட்சம் மக்கள் உலகின் பல நாடுகளில் இருந்து இந்தியர்விற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து இந்திய தலைநகர் டெல்லிக்கு நேற்று 154 பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் தாயகம் திரும்பினார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Telegram      – https://t.me/malaysiatms