“தலைநகரில் குறையும் தொற்று” – 50,000 கடந்த பாதிப்பு எண்ணிக்கை.!

KL Corona Update
Image tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் கடந்த சில நாட்களாக சபாவை பின்னுக்கு தள்ளி தொற்று எண்ணிக்கையில் முதல் இடம் பிடித்து வந்தது தலைநகர் கோலாலம்பூர். (KL Corona Update)

இந்நிலையில் தலைநகரின் நிலைமை சரியடைய தொடங்கியுள்ளது. ஆனால் மீண்டும் சபாவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. (KL Corona Update)

மணிக்கட்டு பட்டையுடன் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள்

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது.

“கல்வி நிறுவனங்களை திறக்க முயற்சிக்க வேண்டும்”

இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று 660 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 50390 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று மட்டும் 630 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை மொத்தம் 37254 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து மலேசியா திரும்பிய ஒருவர் உள்பட மலேசியா திரும்பிய 4 பேருக்கு நேற்று கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.(KL Corona Update)

மேலும் இந்த நோயின் காரணமாக நேற்று நான்கு பேர் மலேசியாவில் இறந்துள்ள நிலையில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்னிக்கை 322ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா, நேபால் மற்றும் இந்தோனேஷியா ஆகிய பகுதிகளில் இருந்து மலேசியா வரும் மக்களால் இங்கு தொற்றின் அளவு சற்று உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடர்ந்து கெடா, சிலாங்கூர், ஜோஹோர், சரவாக் மற்றும் மலாக்கா ஆகிய பகுதிகளிலும் சில தொற்று சம்பவங்கள் காணப்பட்டு வருகின்றது.

கடந்த 2 வாரத்திற்கும் மேலாக மலேசியாவில் தொற்று எண்ணிக்கை 800ஐ தாண்டிய நிலையில் நேற்று 660 என்ற அளவிற்க்கு தொற்று குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram