கோலாலம்பூர் – சென்னை : தாயகம் புறப்பட்ட 370 இந்தியர்கள்.!

KL Chennai Flights
Image tweeted by Indian High Commission Malaysia

இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் சென்னை, கொச்சி மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு 370 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் சென்றனர். (KL Chennai Flights)

இந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னை – கோலாலம்பூர் மற்றும் கோலாலம்பூர் – சென்னை மார்கமாக பல விமானங்களை இயக்கவுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (KL Chennai Flights)

கோலாலம்பூர் – திருச்சி – மேலும் ஆறு சிறப்பு விமானங்கள் இயக்கம்.!

இந்நிலையில் இந்த சென்னை முதல் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கான ஜனவரி மாத விமான சேவை முன்பதிவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அண்மையில் தொடங்கியது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது.

இருமுனை பயணமாக விமானங்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் முதல் பயணம் இன்று கோலாலம்பூர் முதல் சென்னைக்கு தொடங்கியது,

கடந்த மே மாதம் தொடங்கி 8 மாதங்களாக வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

அதே சமயம் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மலேசியாவிற்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பின்படி வரவிருக்கும் ஜனவரி மாதத்திற்கான திருச்சி முதல் மலேசிய சேவைக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

பயணிகள் இந்த பயணத்திற்கான டிக்கெட்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. (Chennai KL Flight)

ஆனால் வந்தே பாரத் மூலம் இயக்கப்படும் விமானங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிற விமான சேவைகளை அதிக அளவில் பயன்படுத்தவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram