“தடுப்புக்காவலில் உள்ள குழந்தைகளை விடுவிக்க வேண்டும்” – Lawyers for Liberty..!

Detention Camp
Image tweeted by Irrawaddy News

மலேசியாவில் தடுப்புக்காவலில் உள்ள குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்று lawyers of liberty என்ற மனித உரிமை குழு தங்களுடைய கருத்தை முன்வைத்துள்ளது. (Detention Camp)

சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவிற்குள் உரிய ஆவணங்கள் இன்றி நுழைய முயன்ற சுமார் 250-க்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகளை (Detention Camp) தடுத்து நிறுத்தியது மலேசிய அரசு.

“மலேசியாவில் ஜனவரி 2021 வரை பள்ளிகள் மூடல்.?”

மேலும் அவர்களை உடனடியாக சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் செய்தது. இந்நிலையில் மலேசியாவில் இருந்து திரும்பசென்ற அகதிகளை பங்களாதேஷ் அரசு ஏற்றுக்கொள்ளாது.

அவர்களை திரும்ப ஏற்க வங்கதேச அரசுக்கு எந்தக் கடமையும் இல்லை என அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன் அனடோலு என்ற செய்தி நிறுவனத்திடம் அப்போது தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அந்த அறிக்கையில், ரோஹிங்கியா மக்கள் மியான்மர் குடிமக்கள் என்றும் அவர்கள் பங்களாதேஷியர்கள் அல்ல என்றும் தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு மலேசிய அதிகாரிகள் சுமார் 269 ரோஹிங்கியா அகதிகளை கைது செய்ததோடு லங்காவி தீவில் இருந்து சேதமடைந்த படகுகளையும் ஒரு சடலத்தையும் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதுபோன்ற தடுப்புக்காவல் மையங்களில் பல ஆதரவற்ற குழந்தைகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவித்து, பெற்றோர் இல்லாத குழந்தைகளை பாதுகாவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கோரியுள்ளது.

மேலும் பாதுகாவலர்களும் அற்ற குழந்தைகளை விடுவித்து உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram