கொச்சி – கோலாலம்பூர் : நேற்றுமுதல் தொடங்கிய இம்மாத விமான சேவை.!

Additional Flights to KL
Image Tweeted by Air India Express

நேற்று முதல் கொச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இம்மாத வந்தே பாரத் விமான சேவை தொடங்கியுள்ளது. (Kerala Kuala Lampur)

மார்ச் 6ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் கொச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. (Kerala Kuala Lampur)

“தனியார் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது”

இந்த விமானம் காலை 9 மணிக்கு கொச்சியில் இருந்து புறப்பட்டு கோலாலம்பூர் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மேற்குறிப்பிட்ட நாட்களில் மாலை 4.45 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து கொச்சிக்கு விமானங்கள் செயல்படும்.

கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழகத்தின் இரு பகுதிகளில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மலேசியா செல்லவுள்ளது.

மார்ச் 1ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை வாரத்திற்கு திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ந்து 5 நாட்கள் இந்த சேவை வழங்கப்படவுள்ளது.

இந்த பயணங்களுக்கான விமான டிக்கெட் முன்பதிவையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து மார்ச் 4ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை அனைத்து வியாழக்கிழமைகளில் காலை 9 மணிக்கு 9.30 மணிக்கு (இந்திய நேரம்) கோலாலம்பூருக்கு விமானங்கள் புறப்படும்.

அதே போல, மேற்குறிப்பிட்ட நாட்களில் கோலாலம்பூரில் இருந்து மாலை 05.25 மணிக்கு விமானங்கள் புறப்பட்டு சென்னை வந்தடையும்.

இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து தொடர்ந்து விமான சேவையை பல நாடுகளுக்கு வந்தே வழங்கி வருகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram