மலேசியாவில் கார் விபத்து – சிறு காயங்களுடன் உயிர் தப்பிய ‘Kento Momoto’

kento momoto

கெண்டோ மொமொடோ “Kento Momoto”, ஜப்பான் நாட்டை சேர்ந்த இவர் உலகின் தலைசிறந்த இறகுபந்தாட்ட வீரர். 26 வயதான கெண்டோ தனது அதிவேக விளையாட்டு திறனுக்கும் கணிக்கமுடியாத ஆட்டத்திற்கும் பெயர்பெற்றவர். ஆசியா சாம்பியன்சிப், உலக சாம்பியன்சிப் என்று பல முன்னணி பதக்கங்கள் அனைத்தையும் இவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவருக்கு ஒரு அதிர்சிகரமான சம்பவம் நடந்துள்ளது, ‘மலேசியா மாஸ்டர்ஸ்’ இறகுபந்து போட்டிகளில் கலந்து கொள்ள மலேசியா வந்த கெண்டோ இன்று அதிகாலை ஒரு சாலை விபத்தில் சிக்கியுள்ளார், நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர்தப்பிய கெண்டோ தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், ஆனால் கெண்டோ சென்ற வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாட்டில் போட்டிகளில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ‘கெண்டோ’ மலேசியாவில் நடந்த ‘மலேசியா மாஸ்டர்ஸ்’ போட்டியில் பங்கேற்று அந்த தொடரின் முதல் வெற்றியையும் பெற்றார். வெற்றி பெற்ற சில மணி நேரம் கழித்து அவர் தனது சக நண்பர்களுடன் கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தை நோக்கி காரில் பயணம் செய்துள்ளார், இந்நிலையில் இன்று அதிகாலை “The Maju Expressway” என்ற இடத்தின் அருகில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிர் நின்ற சுமார் முப்பது டன் எடை கொண்ட கனரக லாரியின் மீது அவர்கள் வந்த கார் பலமாக மோதியுள்ளது, இந்த விபத்தில் கார் ஓட்டுனர் ‘பவன்’ சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

kento accident

இந்த காரில் ‘கெண்டோ மொமொடோவுடன்’ அவராது சக போட்டியளர்கள் ‘Yu Hirayama’ மற்றும் ‘Morimoto Arkifuki’ ஆகியோரும் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் கெண்டோ மற்றும் அவரது சக போட்டியளர்கள் சிறு காயங்களுடன் உயிர்தபியதகவும் அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் களநிலவரம் தெரிவிகின்றது.