மலேசியா வரும் சீன பயணிகள் அனைவரையும் தனிமை படுத்துவது கடினம்

mahatir bin mohamed

கொரோனா, ஆசிய நாடுகள் மட்டும் இன்றி அமெரிக்காவிலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சமூக வலைதளங்களில், சீனாவின் வுஹன் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து செவிலியர் ஒருவர் பேசுவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் நான் கொரோனா வைரஸ் அதிகம் காணப்படும் வுஹன் மாகாணத்தில் உள்ளேன்.

இங்கு தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது, இங்கு நிலவும் உண்மை நிலையை எந்த ஊடகனும் வெளியிடவில்லை என்றும் தெரிவித்தார். அரசாங்க அறிவிப்பின்படி 2000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்த நிலையில் இந்த செவிலியர் சீனா முழுவதும் சுமார் ஒன்பது லட்சம் பேர் பாதிக்கபடுள்ளதாக கூறுகின்றார்.

இது எந்த அளவிற்கு உண்மை என்று இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் ஒரு வீடியோவில் சீனா முழுவதும் ராணு கட்டுபாட்டில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றும் பரவிவருகிறது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மலேசிய பிரதமர் மகாதீர் சீனாவில் இருந்து மலேசியா நோக்கி பல சுற்றுலா பயணிகள் வருவாதால், அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவது மிகவும் கடினம் என்று, மேலும் அது சாத்தியமில்லாத ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே சீனாவில் இருந்து வந்த முன்று பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, அவர் மூன்று பேரும் சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் வழியாக மலேசிய நாட்டிற்குள் வந்துள்ளனர், தற்போது அவர்களுக்கு தவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.