“இவர் தான் எங்கள் நிறுவன COO” : போலியான விளம்பரம் – எச்சரித்த நூர் ஹிஷாம் அப்துல்லா..!

Malaysia Election
Image tweeted by noor hisham abdulla

கொரோனா வைரஸ் காரமனாக முதல் தொற்று மலேசியாவில் கண்டறியப்பட்ட நாள் முதல், தன்னுடைய அயராத பணியை மலேசிய நாட்டிற்கு அளித்து வருகின்றார் சுகாதார அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா.

தினமும் மலேசியாவில் சுமார் 11,500-க்கும் அதிகமான பேருக்கு கொரோனா தொற்று குறித்த சோதனை நடத்தப்படுகிறது.

அதே சமயம் இயக்குனர் ஜெனரல் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் மேலும் ஐந்து புதிய லேப் திறக்க உள்ளதாக கூறினார்.

இதையும் படிங்க : மலேசியா திரும்பிய 15 பேருக்கு நோய் தொற்று : அதில் 12 பேர் இந்தியர்கள் – சுகாதார அமைச்சகம்..!

இவ்வாறு சிறந்த முறையில் அவர் பணியாற்றி வரும் நிலையில், சீனாவை சேர்ந்த CGTN எனப்படும் China Global TV Network என்ற நிறுமவம் கொரோனா தொற்றுநோயைக் கையாளும் உலகின் தலை சிறந்த முதல் முதல் மூன்று மருத்துவர்களில் ஒருவராக மலேஷிய சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவை அறிவித்து சில மாதங்களுக்கு முன்பே கௌரவபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் அமெரிக்காவின் Dr Anthony Fauci முதலிடத்திலும், நியூஸிலாந்தின் Ashley Bloomfield இரண்டாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “Kashi Mining Company” என்ற நிறுவனம் சுகாதார இயக்குநர் ஜெனரல் அவர்களின் புகைப்படத்தை பயன்படுத்தி தங்களுடைய நிறுவனத்தின் COO அதாவது தலைமை செயல்பாட்டு அதிகாரி அவர் என்று குறிப்பிட்டு போலியாக விளம்பரம் செய்துள்ளதை சுட்டிக்காட்டி அது போலி என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முக்கிய பதவி வகிக்கும் ஒருவரின் புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram