பாமாயிலை தொடர்ந்து வருகிறதா அடுத்த தடை ? இந்திய – மலேசிய உறவு என்னாகும் ?

malaysian president

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மலேசிய நாட்டில் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. பாமாயில், எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சில வேதிப்பொருட்கள் இவை முன்று தான் இந்தியா மலேசியாவில் இருந்து அதிகம் இறக்குமதி செய்கின்ற பொருளாக கருதப்படுகிறது. அதேபோல பெட்ரோலிய பொருட்கள், இயந்திரங்கள், இறைச்சி, ஸ்டீல் மற்றும் இரும்பு சார்ந்த பொருட்கள் இவைதான் இந்தியா மலேசியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களாக திகழ்கின்றன.

இந்த வருட தொடக்கத்தில் மலேசிய பிரதமர் காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்தே இந்த குழப்பங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கபடுகிறது, அந்த கருத்து வெளியானதற்கு பின்னர் இந்தியா விதித்த புது தடையில் மலேசிய பாமாயில் வர்த்தகம் பாதித்தது. இந்நிலையில் தற்போது இந்தியா மலேசியாவை குறிவைத்து மேலும் ஒரு புதிய தடையை விதிக்க இருப்தாக தகவல்கள் வெளியாகி உள்ள. எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான புதிய தடையாக அது பார்க்கபடுகிறது.

இந்தியாவிற்குள் நுழையும் மலேசியா எலெக்ட்ரானிக் பொருட்களின் தரத்தை நன்கு பரிசோதனை செய்யுமாறு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கட்டளை அதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக பலர் தெரிவிகின்றனர். இந்த தடையால் இன்னும் என்ன பதிப்புகள் இந்திய – மலேசிய வர்த்தகத்தில் ஏற்படும் என்று தெரியவில்லை. ஆனால் இந்த மோதல் போக்கு விரைவில் மாற்றப்படவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.