காண்போரை ஆச்சர்யப்படவைக்கும் ‘Invisible Photography’ – அசத்தும் தந்தை மகன் காம்பினேஷன்..!!

Annamalai and Aarav
Image Instagramed by sunsaucer

இந்தப் பூவுலகில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயங்கள் பல, அவற்றில் எப்போதும் முதன்மை இடத்தை பெறுவது விண்வெளி மட்டுமே. வான்வெளியும் அதுசார்ந்த ஆராய்ச்சிகளும் நம்மை எப்போதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்த தவறியதில்லை. இந்த பதிவில் நாம் காணவிருப்பது ஒரு ஏழு வயது சிறுவனும் அச்சிறுவனின் தந்தையும் இணைந்து நடத்தும் வான்வெளி ஆராய்ச்சி நம்மை சற்று வியப்பில் ஆழ்த்துகிறது என்றால் அது மிகையல்ல.

பினாங்கு பகுதியைச் சேர்ந்த 47 வயதான அண்ணாமலை என்பவரும் அவரது மகனான ஏழு வயது நிரம்பிய ஆரவ் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வான்வெளி குறித்தும் குறிப்பாக நிலவு குறித்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மலேசிய இந்தியர்களான இந்த தந்தை மகன் காம்பினேஷனில் அவர்கள் “Invisible Photography’ அதாவது கண்ணுக்கு தெரியாத பொருட்களை புகைபடமெடுக்கும் ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர்.

47வயதான அண்ணாமலை இந்த அற்புத கலையை தனது மகனிடமும் விதைத்துள்ளார். இவ்விருவரும் இணைந்த நிலா மற்றும் விண்வெளி மண்டலத்தில் சுற்றித்திரியும் பல மரமான விஷயங்களை புகைபடமெடுத்து அசத்தி வருகின்றனர். இவ்வாண்டு தொடக்கத்தில் MARA தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த அறிவியல் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு இவர்கள் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.