“காலாவதியான விசாக்கள்” – 1168 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளனர் – மலேசிய அரசு.!

Detention Centre
Image tweeted by India in malaysia

தற்போது உலக அளவில் மெல்ல மெல்ல உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளத்து. சில நாடுகள் குறிப்பிட்ட பிற நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவையையும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மலேசியா உள்பட சீனா, வியட்நாம், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் தற்போது உள்நாட்டு சுற்றுலா மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 5 மாதகால போராட்டத்திற்கு பிறகு இந்த இதமான சூழல் நிலவினாலும் இன்னும் 90 சதவிகித உலக நாடுகள் முழு பூட்டுதலில் தான் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இந்நிலையில் பல நாடுகளும் பிற நாடுகளில் உள்ள தங்கள் மக்களை தாயகம் அழைத்து வருகின்றது.

இதையும் படிங்க : “மலேசியாவிற்குள் நுழைய விரும்பும் மலேசியரல்லாதவர்கள்” – மூத்த அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

இந்திய அரசும் வந்தே பாரத் திட்டத்தை அறிமுகபடுத்தி பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டு மக்களை தாயகம் அழைத்து செல்கிறது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து தமிழக செல்லும் அடுத்த மாத விமானங்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது சிங்கப்பூரில் செயல்படும் இந்திய உயர் கமிஷன். விரைவில் மலேசியாவில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வந்து உரிய ஆவணங்கள் இன்றி சுமார் 8 முதல் 15 மாதங்கள் உரிய விசா இல்லாமல் மலேசியாவில் வேலைபார்த்து வந்த பல இந்தியர்களை மலேசிய அரசு கைது செய்தது என்று கூறப்படுகிறது. போலி ஏஜெண்டுகளை நம்பி இவர்கள் மலேசியா வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் சிக்கியிருந்த மக்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி அதன் பிறகு சிறப்பு விமானம் மூலம் தாயகம் அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரை 1168 இந்தியர்கள் தாயகம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Telegram      – https://t.me/malaysiatms