கோலாலம்பூர் : ஊழியர் மீது எச்சில் துப்பிய இளைஞன் – வெளுத்துவாங்கிய தமிழர் – வைரலாகும் வீடியோ..!

spitted on indian
Picture courtesy Behindwood

மலேசியாவை பொறுத்தவரை பிற நாடுகளில் இருந்து வந்து இங்கு வேலை பார்ப்பவர்களின் எண்னிக்கை மிக அதிகம். குறிப்பாக இந்தியர்கள் பலர் மலேசியாவின் பல பகுதிகளில் வேலைசெய்து வருகின்றனர். பிழைப்பிற்காக சொந்த நாட்டை விட்டு பிற நாடுகளுக்கு செல்லும் பலர் தவிர்க்க முடியாத சில சமயங்களில் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு இடத்தில் ஆந்திராவை சேர்ந்த ஒரு இந்தியர் தோட்ட வேலை செய்து வருகின்றார்.

சம்பவதனன்று அந்த ஆடவர் வேலை செய்துகொண்டிருந்த பொது அங்கு வந்த இந்தோனேசிய வாலிபர் ஒருவர், அவர் சரியாக வேலை செய்யவில்லை என்றும் மேலும் அவரை குறித்து நிர்வாகத்தின் முதலாளியிடம் புகார் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அந்த இந்தோனேஷிய வாலிபர் அந்த ஆந்திர ஆடவர் மீது எச்சில் துப்பியதாக கூறப்படுகிறது.

தொழிலாளி மீது எச்சில் துப்பியவனுக்கு கன்னம் பழுக்க பாடம் புகட்டிய வீரத்தமிழன்

தொழிலாளி மீது எச்சில் துப்பியவனுக்கு கன்னம் பழுக்க பாடம் புகட்டிய வீரத்தமிழன்

Posted by Behindwoods on Friday, July 31, 2020

இந்நிலையில் இந்த நிகழ்வை அருகில் இந்து பார்த்த தமிழர் ஒருவர் சற்றும் தயங்காமல் அந்த இந்தோனேசிய வாலிபரை அழைத்து ஏன் அவ்வாறு செய்தாய் என்று கூறி அந்த இந்தோனேசிய இளைஞரை அடித்துள்ளார். மேலும் இந்த நிகழ்வை முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார். மேலும் அந்த ஆந்திரா ஆண்டவரிடம் சென்று உங்களுக்கு நேரும் துன்பத்தை கண்டு அமைதியாக இல்லாமல் தக்கபதிலடி கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பரவிய இந்த காணொளி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கண்ணெதிரில் நடக்கும் தவறை அவர் தட்டிக்கேட்டதற்கு பாராட்டுக்கள் குவிந்தாலும் அந்த இந்தோனேசிய ஆடவரை சரமாரியாக அடித்ததற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கோலாலம்பூரில் காவலர் ஒருவரை தாக்கிய வழக்கில் நேபால் இளைஞர் ஒருவர் கைதானது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms