‘மலேசியாவில் இருந்து திரும்ப அனுப்பப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்’ – ஏற்க்க மறுக்கும் பங்களாதேஷ்.

Rohingya Refuges

சில தினங்களுக்கு முன்பு மலேசியாவிற்குள் உரிய ஆவணங்கள் இன்றி நுழைய முயன்ற சுமார் 250-க்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகளை தடுத்து நிறுத்தியது மலேசிய அரசு. மேலும் அவர்களை உடனடியாக திருப்பி அனுப்பவும் செய்தது. இந்நிலையில் மலேசியாவில் இருந்து திரும்பசென்ற அகதிகளை பங்களாதேஷ் அரசு ஏற்றுக்கொள்ளாது, அவர்களை திரும்ப ஏற்க வங்கதேச அரசுக்கு எந்தக் கடமையும் இல்லை என அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் அனடோலு என்ற செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் வெளியிட்ட அந்த அறிக்கையில், ரோஹிங்கியா மக்கள் மியான்மர் குடிமக்கள் என்றும் அவர்கள் பங்களாதேஷியர்கள் அல்ல என்றும், அந்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்கள் அன்று மலேசிய அதிகாரிகள் சுமார் 269 ரோஹிங்கியா அகதிகளை கைது செய்ததோடு லங்காவி தீவில் இருந்து சேதமடைந்த படகுகளையும் ஒரு சடலத்தையும் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பங்களாதேஷ் நாட்டில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் இருப்பதாககவும், அவர்களை வெளியேற்றி பிற நாடுகளுக்கு அழைத்துச்சசெல்வதை அந்நாட்டு அரசு வரவேற்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.