‘மலேசியா வந்த இந்திய பிரஜைக்கு நோய் தொற்று’ – சுகாதார அமைச்சகம் தகவல்..!!

Noor Hisham Abdullah
Image Tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் கடந்த நாட்களாக குறைந்து வந்த உள்ளூர் தொற்று நேற்று மீண்டும் இரட்டை இலக்கத்தை நெருங்கியது. நேற்று புதிதாக நோய் தொற்று பாதிக்கப்பட்ட 15 பேரில் வெளிநாட்டில் இருந்து மலேஷியா திரும்பிய இந்தியர் ஒருவர் உற்பட 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் உள்ளூரில் 11 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா, Brickfields என்ற பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதி தொற்று பரவலுக்கு ஓர் முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அங்குள்ள அந்த உணவகத்திற்கு வந்த சுமார் 250 பேருக்கு தனிப்பட்ட முறையில் சோதனை நடத்தப்பட்டது என்றும் அதில் இரண்டு இந்தியர்களுக்கு தற்போது நோய் இருப்பது உறுதியாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மலேசியாவில் வேறு இரண்டு இடங்களில் நோய் பரவளின் விகிதம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்படுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் கூட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms