“இந்திய உணவகங்களில் இருந்து விலகி இருங்கள்.?” – அதிர்ச்சியை கிளப்பிய போலியான செய்தி.!

Indian Restaurant
Image tweeted by Noor Hisham Abdulla

மலேசியாவில், குறிப்பாக இந்திய உணவகங்கள் மூலம் பல தொற்றுகள் பரவி வருகின்றது என்ற செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார் மலேசிய சுகாதாரத் துறை இயக்குனர் ஜெனரல். (Indian Restaurant)

கொரோனா காலகட்டத்தில் ஆரம்ப நிலையில் பன்னாட்டு விமான சேவை தடைப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. (Indian Restaurant)

“3 நாட்களாக 1000ஐ கடக்கும் தொற்று”  

அதன் பிறகு பன்னாட்டு சேவைகள் தொடரப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பும் மக்கள் சிலருக்கு தொற்று உறுதியாக அவர்கள் மூலம் பலருக்கு தொற்று பரவியது.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள சிவகங்கையில் இருந்து மலேசியாவின் கெடா பகுதிக்கு திரும்பிய ஒரு உணவாக முதலாளி மூலம் பலருக்கு தொற்று பரவியது.

அதன் பிறகு கவனக்குறைவாக செயல்பட்ட அவருக்கு, அபராதமும் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மலேசிய நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி ஒன்றை குறிப்பிட்டு அது தவறான தகவல் என தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் சுகதத நூர் ஹிஷாம் அப்துல்லா. (Indian Restaurant)

ஜீனோம் G64 என்ற வைரஸ் இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உள்ளதாகவும். இந்த வைரஸ்களுக்கு மருந்து இல்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாசி கண்டர் போன்ற இந்திய ரெஸ்டாரண்ட்களில் இருந்து விலகி இருங்கள் என்றும் அந்த செய்தியில் குறிப்படப்பட்டுள்ளது.

இந்த செய்தியை மேற்கோள்காட்டி பேசியுள்ள நூர் ஹிஷாம் அப்துல்லா, இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகள் பரப்புவதை நிறுத்தவேண்டும் எண்டு கூறினார்.

கொரோனா குறித்து அரசு வெளியிடும் தகவல்கள் மட்டுமே உண்மைத்தன்மை வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram