Serdang : வேலையில்லாததால் மனஉளைச்சல் – தற்கொலை செய்துகொண்ட இந்திய விமானி..!

Suicide
Picture Courtesy The Indian Express

தற்போது உலகையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கொரோனா உலக அளவில் பல லட்சம் மக்களை கொன்று குவித்துள்ளது. அறிவியல் வளர்ச்சி விண்ணைத்தாண்டி சென்றுவிட்ட நிலையில் கூட கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இந்த நோயினை அழிக்க முடியாமல் உலகே திணறி வருகின்றது என்றால் அது மிகையல்ல. வியட்நாம், நியூஸிலாந்து போன்ற நாடுகள் இந்த நோய் தொற்றில் இருந்து மீண்டுவிட்டாலும் அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்பது நிதர்சனம்.

மலேசிய உள்ளிட்ட நாடுகள் முழுஅளவில் இந்த நோயில் இருந்து மீளவில்லை என்றபோது சிறந்த முறையில் எதிர்த்து போராடி வருகின்றனது. இது ஒருபுறம் இருக்க இந்த நோய் ஏற்படுத்திய பொருளாதார முடக்கத்தால் உலகமே பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பலர் வேலை இழந்து வாடிவருகின்றனர். மலேசிய அரசு மலேசியர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதிவரை குறிப்பிட்ட சில துறைகளை தவிர பிற துறைகளில் வெளிநாட்டவர்களை அனுமதிக்க கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த ஏர் ஆசியா நிறுவனத்தின் விமானி ஒருவர் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பணியில்லாத விரக்தியில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் செர்டாங் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சீவ் என்ற அந்த ஆடவர் கடந்த இரண்டு மாதங்களாக வேலை இன்றி பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானதாக தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையிலும் அவர் தற்கொலை செய்துகொண்டது உறுதியாகி உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms