“இந்திய வெங்காயத்தை விரும்பும் மலேசியர்கள்” – குறைந்து வரும் வரத்து.!

Indian Onion
Image Courtesy Free Malaysia

இந்திய மலேசிய உறவு என்பது பல நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் ஒன்று. இன்றளவும் வாணிபத்தில் இரு நாடுகளும் நல்ல நட்புறவை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. (Indian Onion)

இந்நிலையில் மலேசியாவில் இந்திய வெங்காயத்தின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. (Indian Onion)

2026-ல் நிறைவுபெறும் ஆர்.டி.எஸ் திட்டம்

இவ்வாண்டு அண்டைநாடான இந்தியாவில் கொரோனா மட்டும் இன்றி மழை மற்றும் வெள்ளமும் அதிக அளவில் காணப்பட்டது.

இதனால் மலேசியாவிற்கான வெங்காய ஏற்டுமதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்கள் சந்தைக்கு வந்துள்ளன.

ஆனால் இந்தியர்கள் மட்டும் இன்றி மலேசியர்கள் மற்றும் சீனர்கள் இந்திய வெங்காயத்திற்கே முன்னுரிமை கொடுக்க முன்வருகின்றனர்.

இதனால் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் வெங்காயங்கள் சந்தைகளில் அதிக அளவில் விற்பதில்லை.

இதனைத்தொடர்ந்து பிற நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் வெங்காயத்தினை பயன்படுத்த அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தை பயன்படுத்த கோரிக்கைவிடத்துள்ளார் அமைச்சர் ரசோல் வாஹிட்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram