பாமாயில் பிரச்சனை – மலேசிய – இந்திய அமைச்சர்கள் அடுத்த வாரம் சந்திப்பு

WEF

கடந்த சில நாட்களாகவே இந்தியா மலேசியா இடையே ஒரு மோதல் போக்கு உருவானது, மலேசியா பிரதமர் மகாதீர் காஷ்மீர் குறித்து பேசிய கருத்தால் உருவான மோதலாக பார்க்கப்படும் இந்த விஷயத்தில், இந்தியா மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் வர்த்தகத்தை நிறுத்துவதாக தெரிவித்ததும், மலேசிய அரசு மலேசியாவில் வேலை பார்க்கும் சுமார் 150,000 இந்தியர்களை தாயகம் அனுப்ப சாத்திய கூறுகள் உள்ளதா என்று ஆய்வு செய்யவிருக்கிறது என்று கூறியதும், இரு நாடுகளும் இடையே மோதல் போக்கை வளர்த்து  வந்தன.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோசில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் World Economic Forum என்ற நிகழ்ச்சியில் மலேசியா மற்றம் இந்திய நாட்டின் வர்த்தக அமைச்சர்கள் சந்திக்க உள்ளனர். இந்த சந்தியில் கண்டிப்பாக இந்த பாமாயில் பிரச்சனை பற்றி பேச இருப்பதாக இரு நாட்டில் இருந்து வரும் தகவல்களும் தெரிவிகின்றன. கடந்த வியாழன் அன்று இந்தியா அமைச்சர் பியுஷ் கோயல் இதை குறித்து பேசும்போது இந்திய அரசு மலேசிய அரசை மறைமுகமாக தாக்குகின்றது என்று வெளிவரும் கருத்துக்கள் முற்றிலும் தவறான தகவல்கள் என்று கூறினார்.

டாவோசில் நடக்கவிற்கும் இந்த சந்திப்பு இந்தியா கேட்டுகொண்டதன் அடிப்படையில் நடக்கிறது என்று மலேசியாவின் பன்னாட்டு வர்த்தக அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது. கண்டிப்பாக அடுத்தவாரம் நடக்கவிற்கும் இந்த பேச்சுவார்த்தையில் ஒரு நல்ல சுமூகமான தீர்வு எட்டப்படும் என்று பலரும் நம்பிக்கை கூறுகின்றனர். இருநாட்டிலும் தற்போதும் நிலவும் சூழ்நிலையில் இந்த இரு அமைச்சர்களின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.