“மலேசியாவிற்கு வெங்காய ஏற்றுமதியை தடை செய்த இந்தியா..?” – அலெக்சாண்டர்

India Onion Export
Image Courtesy The Star

இந்தியாவின் காஞ்சிபுரம் வெங்காயம் மற்றும் பெங்களூரூ ரோஸ் வெங்காயத்திற்கு மலேசியாவில் எப்போதும் கிராக்கி அதிகம். (India Onion Export)

இந்நிலையில், இந்தியா கடந்த அக்டோபர் 14ம் தேதி முதல் மலேசியாவிற்கு வெங்காய ஏற்றுமதியை தடை செய்துள்ளதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனிட்டாளர் அமைச்சர் தெரிவித்தார். (India Onion Export)

“தினமும் புதிய உச்சம்” – மலேசியாவை வாட்டி வரும் கொரோனா.!

டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி வெளியிட்ட அறிக்கையில் காஞ்சிபுரம் மற்றும் பெங்களூரூ வெங்காயத்திற்கு இங்கு கிராக்கி அதிகம் என்று தெரிவித்தார்.

ஆனால் கடந்த அக்டோபர் 14ம் தேதி முதல் இந்திய அரசு முற்றிலும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை பிறப்பித்துள்ளதாகவும். இதில் அந்த இரண்டு வகை வெங்காயமும் அடங்கும் என்று தெரிவித்தார்.

இதனால் உள்ளூர் பயனீட்டாளர்கள் பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயங்களை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவிலும் மழை, வெள்ளம் மற்றும் கொரோனா காரணமாக வெங்காய விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் வெங்காயத்தை பயன்படுத்த அரசு நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது .

இருப்பினும் இந்திய வெங்காயத்தின் வரத்து குறைந்தது உணவுப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram