“விஸ்வரூபம்” எடுக்கிறது இந்திய – மலேசிய பாமாயில் வர்த்தகம்

palm-oil

இந்திய அரசாங்கம் விதித்த புதிய கட்டுப்பட்டால், இந்திய பாமாயில் இறக்குமதியாளர்கள், மலேசியாவிடமிருந்து அனைத்து கொள்முதல்களையும் தற்போது நிறுத்தியுள்ளனர். மலேசியா பிரதமர் காஷ்மீர் குறித்து கூறிய கருத்தே இதற்கு பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் “அதிகாரப்பூர்வமாக மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ய இதுவரை எந்த தடையும் இந்தியாவில் விதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய பாமாயில் இறக்குமதியாளராக இருக்கும் இந்தியா, ஆண்டுதோறும் சுமார் 9 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து பாமாயிலை வாங்குகிறது.
2019ம் ஆண்டின் நிலவரப்படி மலேசியாவில் இருந்து வருடத்திற்கு சுமார் 4.4 மில்லியன் டன் பாமாயிலை இந்தியா கொள்முதல் செய்ததாக மலேசிய பாமாயில் போர்டு (எம்.பி.ஓ.பி) தெரிவிக்கின்றது.

நேச நாடுகளாகிய இந்தியா மற்றும் மலேசிய இடையே தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த வர்த்தக பாதிப்பு, வர்த்தக போராக மாறாமல் இருக்கவேண்டும் என்பதே இரு நாட்டில் இருக்கும் பாமாயில் உற்பத்தியாளர்களின் வேண்டுகோளாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக விஷ்வரூபம் எடுக்கும் இந்த பிரச்னையை தீர்க்க இரு நாடுகளும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கும் என்று பலரும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.