இந்தியா – கோலாலம்பூர் : இன்று புறப்படும் சிறப்பு ஏர் இந்திய எக்ஸ்பிரஸ்

India KL Special Flight
Image tweeted by India in Malaysia

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்த ஜனவரி மாதம் கூடுதலாக 16 சிறப்பு விமானங்களை இந்தியா முதல் கோலாலம்பூருக்கு இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். (India KL Special Flight)

இன்று மாட்டு பொங்கல் அன்று இந்தியாவில் இருந்து ஒரு சிறப்பு விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட உள்ளது. (India KL Special Flight)

“3337” – மலேசியாவில் தொடர்ந்து புதிய உச்சத்தில் கொரோனா.!

கடந்த ஜனவரி 4 2021 ஆண்டு முதல் திருச்சி கோலாலம்பூர் மற்றும் கோலாலம்பூர் திருச்சி மார்க்கமாக விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கி வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் இருந்து 16 சிறப்பு விமானங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கவுள்ளது.

ஜனவரி 12, 15, 19, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்தும், 14,16,21,23,28,30 ஆகிய தேதிகளில் டெல்லியில் இருந்தும் கோலாலம்பூர் செல்ல உள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.

மேலும் நாளை ஜனவரி 16 மற்றும் 30 தேதிகளில் கொச்சியில் இருந்தும் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்தும் கோலாலம்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

பயணிகள் இதற்கான டிக்கெட்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மூலமாகவும், கால் சென்டர்கள் மூலமாகவும் மற்றும் அதிகாரபுரவ ட்ராவல் ஏஜெண்டுகள் மூலமும் பதியலாம்.

அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை பன்னாட்டு விமான சேவை, இந்த மாதம் 31ம் தேதி வரை தொடர்ந்து தடையிலேயே இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.

இதனால் பிற நாடுகளில் இருந்து, குறிப்பாக மலேசியாவில் இருந்து மக்கள் பயணிக்க வந்தே பாரத் மூலம் செயல்படும் விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram