கோவிட் 19 தொற்று : இந்த ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பு ரத்து – மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப்..!!

independance day parade
Photo Courtesy : packist.com

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று 3 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 8677 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மலேசியாவில் தொற்றின் அளவின் கணிசமான அளவு குறைந்து வந்தாலும் முழுமையாக கோவிட் 19 ஒழிக்கப்படாத நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் சுதந்திர தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக மூத்த அமைச்சர் டத்தோ இஸ்மாயில் சபரி யாக்கோப் கூறியுள்ளார்.

மலேசியாவின் சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்று நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் நிலை ஏற்படும். ஆகையால் நோய் பரவல் உள்ள இந்த நிலையில் அந்நிகச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற நிகழ்ச்சிகள் உரிய பாதுகாப்புடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.