ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு மலேசியாவில் முடிவுக்கு வர உள்ள நிலையில். கடந்த 28ம் தேதி தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார் மலேசிய பிரதமர். மலேசியாவில் தற்போது அமலில் இருக்கும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டில் மேலும் சில தளர்வுகளுடன் இந்த ஆண்டு இறுதிவரை (டிசம்பர் 31ம் தேதி) வரை நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மலேசியாவில் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் முழு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது உலகில் லட்சக்கணக்கான மக்களை வாட்டி வதைத்து வருகின்றது கொரோனா. அதே சமயம் நியூஸிலாந்து போன்ற சில நாடுகள் கொரோனா பிடியில் இருந்து முற்றிலும் விடுபட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நோயின் தாக்கம் அண்டை நாடான இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் ஒரே நாளில் சுமார் 70,000-க்கும் அதிகமானோர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : “காலாவதியான விசாக்கள்” – 1168 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளனர் – மலேசிய அரசு.!
இந்நிலையில் மீட்சிக்கான இந்த கட்டுப்பாட்டில் சுகாதார நிலையை கருத்தில் கொண்டு வெளிநாட்டு பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று உறுதியாக தெரிவுள்ளார் பிரதமர். தற்போது மலேசியாவில் நோய் சிறந்த முறையில் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ஆதலால் வெளிநாட்டு மக்களை அனுமதிக்க திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மலேசிய சுற்றுலா துறை அண்மையில் வெளிநாட்டு பயணிகள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு பயணிகள் மட்டும் இன்றி மலேசியர்கள் அல்லாத பிற நாட்டு தொழிலார்களுக்கும் மலேசிய எல்லை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Telegram – https://t.me/malaysiatms