இரண்டு நாள் அரசுமுறை பயணம் – மலேசியா வருகிறார் பாகிஸ்தான் பிரதமர்

Imran Khan

பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான் இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா வரவுள்ளார், பாகிஸ்தான் வெளிவுறவு துறை அமைச்சகம் அறிவிப்பின்படி மலேசியா நாட்டு பரதமர் மகாதீர் அவர்களின் அழைப்பினை ஏற்று இரண்டு நாள் பயணமாக 3 மற்றம் 4ம் தேதி மலேசியா வரவுள்ளார் இம்ரான் கான். இந்த பயணத்தின் போது இம்ரான் கான் அவர்களுடன் காபினெட் மந்திரிகள் மற்றம் பிற துறை சார்ந்த உயர் அதிகாரிகள் சிலர் பங்கேற்க உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது மலேசியா மற்றும் பாகிஸ்தான் இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த பயணத்தின் ஒரு அங்கமாக பிரதமர் இம்ரான் கான் மலேசியாவில் உள்ள Institute of strategic and International Studies என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில் கடந்த சில காலமாகவே வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு, கல்வி உளிட்ட பல துறைகளில் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் இந்த வருகை மிகவும் முக்கியத்துவமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த Pakistan Day நிகழ்ச்சியில் மலேசிய பிரதமர் மகாதீர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.