மலேசியா : ‘மூன்று நாடுகளை சேர்ந்த ஆவணமில்லாத குடியேறிகள்..!!’ – மலேசிய அரசு எடுத்த அதிரடி முடிவு.

isamail sabri

கொரோனா தொற்றின் தாக்கம் உலகம் முழுக்க பரவத் தொடங்கி சுமார் 5 மாதங்களை கடந்துள்ளது. இந்நிலையில் மலேசியா தனது நாட்டில் சிக்கியுள்ள பிற நாடுகளை சேர்ந்த மக்களை சொந்த நாடுகளுக்கு பாத்திரமாக அனுப்பிவைத்து வருகின்றது. அதே சமயம் அண்மைகாலமாக மலேசியாவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் பிற நாட்டை சேர்ந்த பிரஜைகளை கைது செய்து வருகின்றது.

இந்நிலையில் கொரோனா தாக்கம் இல்லாத இந்தோனேசியா, வங்காளதேசம் மற்றும் நேப்பாள் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த உரிய ஆவணங்கள் இல்லாத மக்களை அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர்களை தங்களது சொந்த நாட்டிற்கு எவ்வாறு திரும்ப அனுப்பப் போகிறோம் என்பதை குறித்து அந்த மூன்று நாடுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் பல நாடுகளை சேர்ந்த ஆவணமில்லாத தொழிலார்கள் அங்கு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.