சட்டவிரோதமாக மலேசியா வந்த படகு – நீரில் மூழ்கி ஒருவர் பலி ஒன்பது பேர் மாயம்  

indonesia immigrant

உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பிற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அவ்வப்போது பலர் பயணித்து தான் வருகின்றனர். வறுமை, வேலையின்மை என்று இதற்கு பல காரணங்களை கூரலாம். இந்நிலையில் இது போல இந்தோனேசியாவில் இருந்து மலேசியாவிற்கு சட்டவிரோதமாக சிலர் படகுமூலம் வந்துள்ளனர், சுமார் 20 பேருடன் மலேசியா நோக்கி வந்த அந்த படகு மலாக்கா ஜலசந்தி அருகில் வந்தபோது விபத்துக்குள்ளாகி நீரில் கவிழ்ந்துள்ளது.

இதுகுறித்து இந்தோனேசியாவின் பெகன்பறு என்னும் மீட்பு நிறுவனம் அளித்த தகவலில், சட்ட விரோதமாக வந்த அந்த படகில் தொழிலாளர்கள் 20 பேர் பயணம் செய்ததாகவும், அவர்களில் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டகவும் கூறினார். மேலும் தற்போது ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

இன்னும் அந்த படகில் பயணம் செய்த ஒன்பது பேரை காணவில்லை என்றும், தற்போது அந்த பகுதி முழுவதும் தலைசிறந்த நீச்சல் வீரர்களை கொண்டு காணாமல்போன ஒன்பது போரையும் தேடிவருவதாகவும் தெரிவித்தார். இந்த தொழிலாளர்கள் அனைவரும் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இந்தோனேசியாவில் இருந்து மலேசியா வந்ததாகவும் தகவல்கள் தெரிவிகின்றது.

இந்த நிகழ்வு குறித்து வரும் களநிலவரங்களை பார்க்கும்போதும், கடந்த 2016ம் ஆண்டு இதே போல இந்தோனேசியாவில் இருந்து படகு மூலம் மலேசியா வந்த சுமார் 101 நபர்கள் அப்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கினர், அதில் 60 இறந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியர்கள் பலர் மலேசியாவில் பாமாயில் தோட்டத்தில் வேலை தேடி வருவதே இதற்கு பெரிய காரணமாக பார்க்கபடுகிறது.