மலேசியாவில் கொரோனா : “அயராது உழைத்துவரும் மருத்துவர்களுக்கு நன்றி” – பிரதமர்

malaysian primeminister

கடந்த ஆண்டின் இருத்தியில் இருந்து சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வுஹானில் பரவ தொடங்கியது இந்த கொரோனா நோய் தொற்று. மலேசியாவை பொறுத்தவரை கடந்த 3 மாதங்களாக இந்த நோய் வாட்டி வதைத்து வருகின்றது. மேலும் கடந்த இந்த 3 மாதங்களாக மலேஷியா மக்களுக்காக அயராது போராடி வருகின்றனர் மருத்துவர்களும், செவிலியர்களும் தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார் மலேசிய பிரதமர் முஹிதீன். மேலும் இந்த இக்கட்டான நிலையில் சுமார் RM 160 மில்லியன் பணத்தை மருத்துவ சார்புடைய பல பொருட்களை வாங்க பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்று மலேஷியா இன்று செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது மட்டும் இல்லாமல் பரவு வரும் இந்த நோயை தடுக்க மலேஷியா சுகாதார அமைச்சகத்திற்கு உதவவும் வகையில் பல்வேறு மருந்துகளை வாங்க சுமார் RM259 மில்லியனுக்கும் அதிகமான தொகையை நாங்கள் அங்கீகரித்துள்ளோம் என்றும் அவர் கூறினார். இதுஒருபுரம் இருக்க மருத்துவர்களும் செவிலியர்களும் “நாங்கள் உங்களுக்காக இங்கு வேலை செய்கின்றோம்… நீங்கள் எங்களுக்காக வீட்டில் இருங்கள்.. என்ற பதாதைகளை ஏந்தியவாறு மக்களை வீட்டில் இருக்க அறிவுறுத்தி வருகின்றனர்.