“எனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை” – மலேசிய பிரதமர் மகாதீர்    

Mahdir-mohammed

நட்பு நாடான இந்தியா விதித்த சில புதிய விதிகளால் இந்தியாவில், மலேசியாவின் பாமாயிலின் இறக்குமதி வெகுவாக குரைந்துள்ளது. இதனால் மலேசியாவிற்கு பாமாயில் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர், சில நாட்களாகவே தொடர்ந்து நிலவி வரும் இந்த பாமாயில் வர்த்தக பிரச்சனை குறித்து முதல் முறையாக மலேசியா பிரதமர் மகாதீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். நேற்று (14.01.2020) அன்று ஒருமைப்பாடு மன்றம் 2020  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் பின்வருமாறு கூறினார்.

மலேசியாவிற்கான மிகப்பெரிய பாமாயில் இறக்குமதியாளராக இந்தியா இருப்பதால், இந்தியாவைப் பற்றி பிரதமரின் விமர்சனம் தொடர்ந்து தொழில்துறையை பாதிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தியாவின் இந்த முடிவு மிகவும் வருத்தமளிக்கிறதும், கண்டிப்பா இந்த நிகழ்வு தொடர்பாக நான் பேச்சுவார்த்தை நடத்துவேன், ஆனால் நான் கூறிய கருத்தில் இருந்து நான் பின்வாங்கப்போவதில்லை என்று அவர் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் நடந்து வரும் விஷயங்களுக்கு உலக நாடுகளில் இன்று மாறுபட்ட கருத்துக்கள் வருவது அனைவரும் அறிந்ததே என்று அவர் கூறினார்.

இந்நிலையில், மகாதீர் இந்த பிரச்சனை குறித்து, தனது அரசு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கும் என்றார். இந்திய அரசு மறைமுக பாமாயில் வர்த்தகத்தை மலேசியாவிடம் இருந்து நிறுத்திக்கொள்ளுமாறு பல நிறுவனங்களிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியானபோதும், இந்தியாவில் இருக்கும் அதிகாரிகள் இந்த தகவலை முற்றிலும் மறுப்பதாகும் மகாதீர் தெரிவித்தார். விஷயம் என்னவாயினும் விரைவில் இந்த வர்த்தக பிரச்சனை சுமூகமாக முடியவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு