நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டதாக உணர்கிறேன் – முன்னாள் மலேசிய பிரதமர்

mahathir

முஹைதீன் பிரதமராக நியமனம் செய்ய வழிவகுத்த மலேசிய அரசியல் நெருக்கடியை அடுத்து, பிபிபிஎம் கட்சி அதன் தலைவரும் முன்னாள் மலேஷியா பிரதமர் மகாதீர் பின் முஹமது இல்லாமல் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. Free Malaysia Today என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் பிபிபிஎம் கட்சியை பொறுத்தவரை டாக்டர் மகாதீர் பெரும்பான்மையைக் நிரூபிப்பதாக தெரியவில்லை என்றும் மேலும் பிபிபிஎம் கட்சியை சேர்ந்த ஐந்து எம்.பி.க்கள் மட்டுமே முஹைதீன் பிரதமராவதற்கு ஆட்சேபனை தெரிவித்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுவதாக தெரிகின்றது.

Singapore Institute of International Affairs என்ற நிறுவனத்தை சேர்ந்த ‘ஓ இ சன்’ என்பவர் Free Malaysia Today செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், தற்போது நிலவும் இந்த அரசியல் சூழ்நிலையில் மகாதீர் பின் முஹமது பிபிபிஎம் கட்சியை என்ன செய்யப்போகிறார் என்பதை விட அந்த பிபிபிஎம் கட்சி அவரைப் பற்றி என்ன முடிவு எடுத்திருக்கிறது என்பதே விவாதிக்க வேண்டிய விஷயம் என்று அவர் கூறியுள்ளார்.

பக்காத்தான் ஹரப்பன் அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அம்னோ மற்றும் பிற கட்சிகளின் உதவியுடன் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முன்வந்த பின்னர், தான் முஹைதினால் நம்பிக்கை துரோகத்திற்கு ஆளானதாக டாக்டர் மகாதீர் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாக தெரிகின்றது. மகாதீர் தலைமையிலான 21 மாத அரசாங்கம் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் சரிந்தது என்றும், அதைத் தொடர்ந்து அவரது கட்சி PH கூட்டணியில் இருந்து விலகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.