‘HSR ப்ராஜெக்ட்” – சிங்கப்பூருக்கு இழப்பீடு கொடுத்த மலேசியா.!

HSR malaysia Singapore (1)
Image tweeted by CNA

HSR அதிவேக ரயில்தட திட்டத்தை கைவிட்டதால் மலேஷியா அரசு சுமார் RM 320,270,519 Ringgit சிங்கப்பூர் அரசுக்கு தற்போது கொடுத்துள்ளது. (HSR Malaysia Singapore)

மேற்குறிப்பிட்ட இந்த தொகை இருதரப்பு ஒப்பந்தத்தின் முடிவு தொடர்பாக ஒரு முழுமையான மற்றும் இறுதி தீர்வை குறிக்கிறது. (HSR Malaysia Singapore)

“கெடா ஹிந்து ஆலயத்திற்கு மாற்று நிலம்?” – சுங்கைபட்டாணி நகராண்மைக் கழகம்

இரு நாடுகளும் நல்ல உறவைப் பேணுவதற்கும், இரு நாடுகளின் மக்களின் பரஸ்பர நலனுக்காக நெருக்கமான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் உறுதியுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எச்.எஸ்.ஆர் திட்டத்தின் செயல்பாட்டிற்கான செலவுகளுக்காக சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் டாலர் மதிப்பில் 102,815,576 $ மலேஷியா செலுத்தியது.

மேலும் இந்த திட்டத்தின் இடைநீக்கம் நீட்டிப்பு தொடர்பாக, சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் ஓங் யே குங் மற்றும் மலேசியாவின் அமைச்சர் பிரதம மந்திரி அமைச்சர் துறை (பொருளாதாரம்) முஸ்தபா முகமது ஒரு கூட்டு அறிக்கையில் தற்போது தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த வந்த இந்த திட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது பல துறையை சேர்ந்த மக்களுக்கு பாதிப்பாக உள்ளது.

HRS திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும் ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இடையேயான ஆர்.டி.எஸ் ரயில் திட்டம் உருவம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த ஆர்.டி.எஸ் திட்டத்தால் மலேசியாவில் பொருளாதாரம் உயரும் என்று ஜோகூர் சுல்தான் அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram