“ஆலயங்களுக்கு செல்ல 6 பேருக்கு மட்டுமே அனுமதி” – இந்து சங்கத்தின் தேசிய தலைவர்.!

Hindu Temple
Sri Kasi Datuk RS Mohan Shan

மலேசியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு பின்பு ஹிந்து ஆலயங்கள் (Hindu Temples)கடந்த ஜூன் மாத இறுதியில் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கியது கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட இயக்க கட்டுப்பட்டு.

மலேசியாவில் பெருமளவில் தொற்று பரவலை தடுக்க ஆலயங்களை (Hindu Temples) முடியாது மிகவும் உறுதுணையாக இருந்தது என்று பல அறிஞர்கள் கூறிவருகின்றனர்.

ஆரம்ப நிலையில் மலேசியாவில் உள்ள 80-க்கும் அதிகமான தொற்று முற்றிலும் இல்லாத பச்சை மண்டலங்களில் உள்ள இந்து கோயில்கள் திறக்க அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கோவில்களின் பாட்டிலையும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “மலேசியாவில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு புதிய SOP” – இஸ்மாயில் சபரி யாக்கோப்.!

தற்போது கோலாலம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்குகிறது. இதனை தொடர்ந்து இந்து சங்கத்தின் தேசிய தலைவர் ஆர்.எஸ். மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மலேசியாவில் நடமாட்டக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள கோலாலம்பூர், சபா, சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் தற்போது உள்ள ஆலயங்களுக்கு செல்ல ஆலய நிர்வாகிகள் மற்றும் குருக்கள் உள்பட 6 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

எதிர் வரும் நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த இக்கட்டான சூழலால் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் ஹிந்து சமயம் சார்ந்த மக்கள் தங்களுடைய வீடுகளில் நவராத்திரி விழாக்களை கொண்டாடிவருவதாகவும் திரு. மோகன் அவர்கள் தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram