“இந்தியர்கள் நலனுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறோம்” – கெடா அரசு

Hindu Temples Malaysia
Twitter Image

கெடா அரசு எப்போது இந்தியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று பெசாரின் இந்தியர்கள் பிரிவு அதிகாரியான குமரேசன் தெரிவித்துள்ளார். (Hindu Temples Malaysia)

ஹிந்து ஆலயங்கள் தொடர்பாக எழும் விவகாரங்களை தங்களுடைய பார்வைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (Hindu Temples Malaysia)

“கோலாலம்பூர் to இந்தியா” – அடுத்தடுத்து செயல்படுத்தப்படும் சிறப்பு விமானங்கள்.!

மலேசியாவில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கியது கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட இயக்க கட்டுப்பட்டு.

மலேசியாவில் பெருமளவில் தொற்று பரவலை தடுக்க இது மிகவும் உறுதுணையாக இருந்தது என்று பல அறிஞர்கள் கூறினார்கள்.

தற்போது வரை இந்த நோயின் தாக்கத்தால் 300-க்கும் அதிகமானோர் இறந்துள்ளார். அதே சமயம் இதுவரை 50,000-க்கும் அதிகமான மக்கள் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மே மாத தொடக்கத்தில் நிலவி வந்த இயக்கக் கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு உத்தரவிட்டது.

மலேசியாவில் உள்ள 80-க்கும் அதிகமான தொற்று முற்றிலும் இல்லாத பச்சை மண்டலங்களில் உள்ள இந்து கோயில்கள் திறக்க அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் ஹிந்து கோவில்கள் தொடர்பாக எந்த சச்சரவுகள் இருந்தாலும் எங்கள் பார்வைக்கு கொண்டுவருங்கள்.

எங்கள் பார்வைக்கு கொண்டுவராமலே அறிக்கை விடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனியார் நிலங்களிலும் வீடுகளின் முன்புறத்திலும் வழிபாட்டு தளங்கள் (கோயில்கள்) அல்லது சாமி மேடைகளை அமைப்பது தொடர்பாக வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை காண எங்கள் உதவியை நாடுங்கள் என்றார் அவர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram