“கொரோனா காலத்தில் உதவும் ஹெர்பல் முகக்கவசம்” – கண்டுபிடித்து அசத்திய தமிழ் பள்ளி மாணவர்கள்.!

Tamil School
Image curtesy : New Straits Times

உலக அளவில் பிறவி வரும் இந்த கொரோனா என்ற அரக்கனுக்கு இதுவரை 146 பேரை பலிகொடுத்துள்ளது மலேசியா.

நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 5 பேர் பலியானது பலரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

மலேசியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஞ்ஞானிகள் இந்த நோய்க்கான மருந்தினை கண்டறிய இரவு பகலாக போராடி வருகின்றனர்.

அதே சமயம் இந்த வருடத்தின் இறுதியில் இருந்து இந்த நோய்க்கான vaccine எனப்படும் தடுப்பூசி வழங்க வாய்ப்புகள் அதிகம் என்று WHO எனப்படும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : “இந்த போரில் வெல்ல மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” – நூர் ஹிஷாம் அப்துல்லா உருக்கம்..!

இது ஒருபுறம் இருக்க இந்த நோய் பரவாமலும் வராமலும் தடுக்க பல முன்னெச்சிரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதில் ஒரு நடவடிக்கையாக முகக்கவசம் திகழ்கின்றது. ஆரம்ப நிலையில் முகக்கவசம் கட்டாயம் அணிய தேவை இல்லை என்று பல நாட்டு அரசுகள் கூறிவந்த நிலையில் தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.ஜே.கே.டி லடாங் எபோர், சுபாங் ஜெயா, சிலாங்கூர் உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த 9 மாணவர்கள் தங்களுடைய அசாதாரண முயற்சியால்,

கோவிட் 19 நோயிலிருந்து பாதுகாக்கும் விதமாக ஹெர்பல் முகக்கவசத்தை கண்டுபிடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்த தமிழ் மாணர்வகளின் படைப்பு தற்போது பலரின் பாராட்டை பெற்று வருகின்றது.

அதே சமயம் இந்த அறிய கண்டுபிடிப்பை நிதர்சனமாகிய மாணவர்களுக்கு UiTM என்று அழைக்கப்படும் Universiti Teknologi Mara என்ற நிறுவனம் நடத்தும் “மெய்நிகர் கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு – IIDEx – 2020 தங்கம் மற்றும் வைரம் ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் படைத்த இந்த சாதனை தமிழர்களை பெருமையடைய செய்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram