“நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்” – பயிற்சியில் ஏற்பட்ட பரிதாபம்..!

Helicopter Accident
Image tweeted by BERNAMA

மலேசியாவின் சிலாங்கூர் மாகாணத்தில் உள்ள உலு கிளாங் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டது ஒரு தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர். (Helicopter Accident)

தனியாருக்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக எதிரில் வந்த ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. (Helicopter Accident)

“தடுப்புக்காவலில் உள்ள குழந்தைகளை விடுவிக்க வேண்டும்”

இந்நிலையில் சிலாங்கூர் பகுதியில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் மலேசிய ஏர்லைன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு. அஹ்மத் ஜவுஹாரி பயணம் செய்துள்ளார்.

நடுவானில் அந்த ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருந்த நிலையில் எதிரில் வந்த மற்றொரு ஹெலிகாப்டருடன் மோதி இரண்டு விமானங்களும் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

எதிரில் வந்த ஹெலிகாப்டரிலும் இரண்டு பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மலேசிய ஏர்லைன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். தீவிர விசாரணைக்கு பிறகு அந்த இரண்டு விமானங்களும் Sultan Abdul Aziz Shah விமான நிலையத்தில் இருந்து புறப்பட பயிற்சி விமானங்கள் என்று தெரியவந்துள்ளது.

9M-HCA மற்றும் 9M-HCB ரகத்தை சேர்ந்த அந்த இரு ஹெலிகாப்டர்களில் நால்வர் பயணம் செய்துள்ளனர். பயிற்சி நேரத்தில் இந்த எதிர்பாராத நிகழ்வு நடந்துள்ளது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram