கோலாலம்பூர் : ‘பணியில் இருந்து முடிவெட்டும் தொழிலாளிக்கு நோய் தொற்று..!!’ – சுகாதார அமைச்சகம்

noor hisham abdulla
Image Tweeted by Noor Hisham Adbullah

மலேசியாவில் சில தளர்வுகளுடம் கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் சில பொருளாதார நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மலேசியா முழுவதும் முடித்திருந்த கடைகள் திறக்க தற்போதைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட்டது. ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற ஐரோப்பிய நாடுகளில் நோய் பரவலுக்கு சலூன் கடைகள் பெரிய காரணமாக இருந்ததை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மலேசியாவில் நோய் தொற்றின் அளவு குறைந்து வருவதை அடுத்து கடந்த ஜூன் 9ம் முதல் கடைகள் திறக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டு, உரிய பாதுகாப்பு முறைகளுடன் முடித்திருந்த கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேசியாவில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த
முடிதிருத்துபவர் ஒருவருக்கு கோவிட்-19 நேர்மறை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த தொழிலாளி தலைநகரில் ஒரு முடித்திருந்த கடையில் பணியாற்றியுள்ளார், மேலும் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் வீடு வீடாக சென்று சேவைகளை வழங்கியுள்ளார் என்ற தகவலை நேற்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்நிலையில் சுமார் 40 பேரை அந்த தொழிலாளி சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.