COVID – 19 : ‘மலேசியாவில் 112 பகுதிகள் பச்சை நிற மண்டலமாக மாறியுள்ளது..’

Green Zone Malaysia

கொரோனா தொற்று பரவியுள்ள இடங்களை குறிக்க பல நாடுகளில் கடைபிடித்து வரும் கொள்கையை போல மலேசியாவிலும் கொரோனா பாதிப்பு உள்ள இடங்களை சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை வண்ண பகுதிகளாக பிரித்து செயல்பட்டு வருகின்றது மலேசிய அரசு. இதன் அடிப்படையில் தற்போது மலேசியாவில் பச்சை நிற மண்டலங்களாக பல இடங்கள் மாறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று சபாவின் கோத்தா பெலுடில், தற்போது எந்த ஒரு கொரோனா பாதிப்பும் இல்லாததால் அந்த இடம் மஞ்சள் வண்ணத்தில் இருந்து பச்சை நிற பகுதியாக மாறியுள்ளது. இதனால் தற்போது 80ஆக இருந்த மஞ்சள் நிற பகுதிகளின் எண்ணிக்கை தற்போது 79ஆக குறைந்துள்ளது. மேலும் மலேசியாவில் தற்போது 10 சிவப்பு நிற மண்டலங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 111ஆக இருந்த பச்சை நிற மண்டலத்தின் எண்னிக்கை தற்போது 112ஆக உயர்ந்துள்ளது பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒன்று முதல் 40 வரை பாதிப்புகள் இருந்தால் அது மஞ்சள் நிற மண்டலம் என்றும். 40க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உள்ள இடம் சிவப்பு மண்டலம் என்றும். பாதிப்புகளே இல்லாத இடத்தை பச்சை மண்டலமாகவும் அரசு அறிவித்துள்ளது.