“லங்காவி உள்ளிட்ட 11 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக மாறியது”

Green Zone Langawi
Image Tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் 14 நாட்கள் நடமாட்டக்கட்டுப்பாட்டை தொடர்ந்து லங்காவி, தாரோ, மறுடி உள்ளிட்ட 11 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக மாறியுள்ளன. (Green Zone Langawi)

இந்த தகவலை பட்டியலோடு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் சுகாதார அமைச்சுக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம். (Green Zone Langawi)

“நாட்டில் முழுமையாக நடமாட்டக்கட்டுப்பாட்டிற்கு அவசியம் இருக்காது?” – பிரதமர்.

மலேசியாவில் நாடுமுழுவதும் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைத்து வருகின்றது.

இன்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 1207 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய ஆறு பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களின் எண்ணிக்கை என்பது 3,28,466 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

இதுஒருபுற இருக்க கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ள மலேசியாவில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1503 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 3,00,620 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று மட்டும் மலேசியாவில் 3 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை 1223 பேர் கொரோனா காரணமாக மரணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் மலேசியாவில் 80 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பல நாடுகளில் இருந்து தொடர்ந்து தேவையான அளவு தடுப்பூசி மருந்துகளும் பெறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Novavax வகை தடுப்பூசியை பெற இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது மலேசிய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram