மலேசிய ‘தொழிலாளர்களைப்’ பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – MTUC

MTUC

இந்த கொரோனாவால் உலகம் முழுக்க பல லட்ச மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக பொருளாதாரமும் அச்சத்திருக்கு உரிய நிலையில் நிற்கின்றது. பல நாடுகளில் பல தொழில்கள் முடங்கிப்போய் உள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாடுகள் தங்கள் நாட்டு அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து 20 முதல் 30 சதவிகிதம் குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த ஊதிய குறைப்பு மற்றும் வேலை இழக்கும் நிலை தற்போது மலேசியாவிலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து ‘மலேஷியா இன்று’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் “கொரோனா நோய் தொற்றால் மலேசியாவில் நிலவும் இக்கட்டான சூழலில், சிறிய மற்றும் நடுத்தரமான நிறுவனங்களின் பராமரிப்பு தொகுப்பு என்ற நிலையில் இடம்பிடிக்காத தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், மலேசிய தொழிலாளர் சங்கம் (MTUC) நேற்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது”, என்று தெரிவித்துள்ளது.

பொருளாதார சரிவு என்பதை உலகமே சந்தித்து வருகின்றது, இந்நிலையில் நிறுவனங்கள் தொழிலாளர்களை ஆதரிப்பதற்கு உதவியாக அரசாங்கத்தின் பல்வேறு நிதி உதவிகளில் சிலவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.