மலேசியா : ‘அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்..?’ – பொதுச் சேவை மையத்தின் இயக்குநர்

Malaysia Office

மலேசியாவில் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதியிட்ட பொது சேவைத் துறை சுற்றறிக்கையில், குறிப்பிட்டுள்ளவாறு அந்த அந்த துறைத் தலைவரின் கட்டளைக்கு ஏற்ப, அதிகாரிகள் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் அல்லது அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊழியர்கள் பணிக்கு திரும்பாமல் இருந்தாலோ அல்லது வீட்டில் இருந்து பணிபுரியாமல் விடுப்பு எடுத்தாலோ பொது ஆணை பிரிவு D-யின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நோன்பு பெருநாளுக்குப் பிறகும் அலுவலங்களில் பணியாற்ற அரசு ஊழியர்கள் தங்களுடைய பணிக்குத் திரும்பவில்லை என்றால் அவர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட சில ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளாகக்கூடும் என்று பொதுச் சேவை மையத்தின் இயக்குநர் முஹமது கைருல் ஆதிப் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் இயக்கட்டுப்பாடு முழுவதும் விளக்கப்படவில்லை என்றாலும் ஓரளவுக்கு தளர்வுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.