“Covax Plan” : மூன்று மில்லியன் டோஸ் தடுப்புமருந்துக்கு RM600 மில்லியன் செலவாகும் – மலேசிய பிரதமர்.!

muhyiddin yassin
Image tweeted by Muhyiddin Yassin

தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலை சமாளிக்க பல நாடுகளும் போராடி வருகின்றது. பல முன்னணி நாடுகள் மாற்றுமருந்தினை கண்டறிய கடுமையாக போராடி வருகின்றன.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை காணொளிக்காட்சி மூலம் சந்தித்த மலேசிய பிரதர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

Gavi – The Vaccine Alliance, இந்த நிறுவனம் ஜெனீவா மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம்.

இந்த நிறுவனம் பொது மற்றும் தனியார் அமைப்புகளின் கூட்டமைப்பில் செயல்பட்டு வருகின்றது. மனித நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறிவதே இந்த நிறுவனத்தின் நோக்கம்.

இதையும் படிங்க : நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா..? – “உங்கள் உதவி எங்களுக்கு தேவை” – மலேசிய அரசு.!

இந்நிலையில் இந்த நிறுவனம் தற்போது செயல்படுத்தி வரும் Covax என்ற கொரோனாவிற்கு எதிரான செயல்பாட்டில் தற்போது மலேஷியா இணைய முடிவெடுத்துள்ளது. இந்த Covax கூட்டமைப்பில் இணைய சுமார் சுமார் RM42மில்லியன் செலுத்த வேண்டும் என்றும் அதே சமயம் 3 மில்லியன் டோஸ் தடுப்புமருந்துக்கு RM600மில்லியன் செலவாகும் என்றும் மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் மலேசியா இந்த கூட்டமைப்பில் இணைந்தாலும், சீனா மற்றும் பிற அமைப்புகளிடம் இருந்து தடுப்பு மருந்து பெறுவதில் இருந்து எந்த சிக்கலும் இல்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் கோவக்ஸ் திட்டத்தில் சேர பிரதமர் முஹைதீன் ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார். அதே சமயம் நாட்டின் மக்கள்தொகையில் சுமார் பத்து சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி கிடைத்தவுடன் இதற்காகும் செலவு குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீனுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

விரைவில் தடுப்பு மருத்து கண்டறியப்பட வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக இருந்து வருகின்றது. நேற்று நால்வர் உள்பட இதுவரை மலேசியாவில் இந்த கொரோனா அரக்கனால் 167 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram