‘மலேசியா முதல் இந்தியா வரை – 10 நாட்கள் 10 விமானங்கள்’ – முழுவிவரம் கொடுத்த High கமிஷன்..!

Vanthe Bharath Phase 4
Image tweeted by India In Malaysia

பிற நாடுகளில் தற்போது கொரோனா தாக்கம் அதிகம் உள்ள நேரத்திலும் மலேசியாவில் இருந்து பிறநாடுகளுக்கும், பிறநாடுகளில் இருந்து மலேசியாவிற்க்கும் சிறப்பு விமானங்கள் மூலமாக மக்கள் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு மாத காலமாக இந்திய அரசு பிற நாடுகளில் உள்ள தங்களது மக்களை வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் சொந்தநாட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறது. மலேசிய அரசும் சில தினங்களுக்கு முன்பு புக்கிட் ஜலீல் குடிநுழைவு மையத்தில் இருந்து பல இந்தியர்களை தன்னார்வலர்களின் உதவியோடு இந்தியாவிற்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில் வந்தே பாரத்தின் phase 4ன் கடைசி விமானம் இன்று புறப்பட்டது. மேலும் தற்போது வந்தே பாரத் திட்டத்தின் அடுத்த நிலை குறித்து தற்போது இந்திய high கமிஷன் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை கோலாலம்பூரில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் மற்றும் அந்த விமானத்திற்கான கட்டணங்கள் உள்ளிட்ட தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்ய தொலைபேசி எண்கள் மற்றும் நேரடியாக சென்று டிக்கெட்களை வாங்க முகவரி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்திய திரும்ப விரும்பும் மக்கள் உடனடியாக இந்த தகவலை பயன்படுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை 10 விமானங்கள் செயல்படுத்த தற்போது முடிவு செய்யப்பட்டது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms