“பரபரப்பை ஏற்படுத்திய மலேசிய முன்னாள் பிரதமர்” – உலகத் தலைவர்கள் கண்டனம்.!

French attack
Image tweeted by Dr Mahathir Mohammed

“பிரெஞ்சுக்காரர்களை தண்டிக்க முஸ்லீம்களுக்கு உரிமை இருக்கிறது”, என்ற (French attack) ஒரு சர்ச்சையான டீவீட்டினை பதிவிட்டு பலரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார் முன்னாள் மலேசிய பிரதமர் மஹாதீர்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முஹம்மத் சில மாதங்களுக்கு முன்பு (French Attack) காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

“கோலாலம்பூர் முதல் திருச்சி வரை”

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரெஞ்சு ஆசிரியர் ஒருவர் வகுப்பில் முஹமது நபிகள் சித்திரத்தை கொண்டு வகுப்பில் போதனை நடத்தியாக கூறப்படுகிறது.

இதற்கு பிறகு அந்த ஆசிரியர் பிரிவினைவாதி ஒருவரால் கொலைசெய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கு உள்ள தேவாலயம் ஒன்றில் மூன்று பேர் தீவிரவாதி ஒருவனால் கொலைசெய்யப்பட்டனர்.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்விற்கு மலேசிய முன்னாள் பிரதமர் தனது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

தற்போது அவருடைய கருத்துக்கு பல உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க தூதர் கமலா ஷிரின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு என்றும். இருப்பினும் மகாதீர் அவர்களின் இதுபோன்ற கருத்துக்கள் வரவேற்கத்தக்கது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் “கண்ணனுக்கு கண்” என்ற சித்தாந்தத்தில் இஸ்லாமிய சொந்தங்களுக்கு உடன்பாடில்லை என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram