மலேசியா – சிங்கப்பூர் : கடற்பாலத்தை கடக்க இலவச பேருந்து வசதி – ஜோகூர் பொது போக்குவரத்துக் கழகம்

Johor to Singapore
Picture Courtesy travellog

இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்துக்கு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி முதல் மீண்டும் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் வெளியிட்டுள்ள அறிக்கையில் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் பணியாளர்கள் 7 நாட்கள் தனித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 14 நாட்கள் என்ற அளவில் இருந்த இந்த தனிப்படுத்துதல் தற்போது 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிவகங்கை கிளஸ்ட்டர் : தமிழகத்திலும் நடந்த கொரோனா சோதனை – தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினர்..?

மேலும் தற்போது குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் கைருஸ் டாவுட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மலேஷியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான எல்லை கடந்த பயணத்திற்கு மக்கள் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். வர்த்தகம் மற்றும் தொழில்சர்ந்த பயணங்களுக்கு மக்கள் RGL பயண முறையை பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார். RGL matrum PCA மூலமாக பயம் செய்ய விரும்பும் மக்கள் MTP எனப்படும் My Travel Pass தளத்தில் http://www.mtp.imi.gov.my பதிவு செய்யலாம்.

இந்நிலையில் இருநாட்டிற்கும் இடையில் உள்ள 1 கிலோமீட்டர் கடல்பாலத்தை கடக்க பேருந்து வசதி இல்லாமல் இருந்தது. இந்த தடையை போக்கும் விதமாக தற்போது ஜோகூர் பொதுப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கம் சிங்கப்பூர் நாட்டின் உட்­லண்ட்ஸ் எனப்படும் சோத­னைச் சாவ­டி மற்றும் மலே­சி­யா இடையே இல­வச பேருந்துச் சேவையை தற்போது தொடங்கியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms