“90 சதவிகித வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி சரியில்லை”

Skill development training
Image Courtesy makkalosai.com.my

மலேசிய மனிதவளத்துறையின் அமைச்சர் ஶ்ரீ M. சரவணன் அவர்கள், மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி இல்லை என்று கூறியுள்ளார். (Foreign Workers Malaysia)

அவர் வெளியிட்ட அறிக்கையில் “தொழிலாளர்களுக்கு, முதலாளிகள் வழங்கும் தங்குமிடங்கள் 90 சதவிகிதம் வசதி அற்றதாகவே உள்ளது” என்று மக்களவையில் கூறியுள்ளார். (Foreign Workers Malaysia)

“KL முதல் சென்னை, கொச்சி, பெங்களூரூ வரை” – தாயகம் சென்ற இந்தியர்கள்.!

நாட்டில் 1.5 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ள நிலையில் அதில் 8 சதவிகிதம் தொழிலாளர்கள் தங்குமிட விவரங்கள் மட்டுமே சமர்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மலேசியாவில் வெளிநாட்டு தொழிலார்கள் தங்குமிடத்தை மேன்படுத்த வேண்டும் என்று மலேசிய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு ஜோகூர் பகுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதை காணமுடிந்தது.

இதனை தொடர்ந்து தற்போது மலேசிய அரசு வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களின் தங்குமிட வசதிகளை மேன்படுத்த வேண்டும் என்று மலேசியா அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டிற்குள் அழைத்துவரும் முன்பே அவர்களுக்கு தேவையான வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிந்தார்.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அந்நிய நாட்டு தொழிலார்களை பெரிய அளவில் ஏற்காமல் உள்ளூர் தொழிலார்களை கொண்டு வேலைகளை தொடங்க மலேசிய அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram