“10 சதவிகித வெளிநாட்டு ஊழியர்களை குறைக்க திட்டம்” – FGV நிறுவனம்.!

Foreign Workers
Picture Courtesy Free Malaysia Today

FGV நிறுவனம் தங்களிடம் வேலை பார்க்கும் சுமார் 32000 வெளிநாட்டு ஊழியர்களில் (Foreign Workers)10 சதவிகிதம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

FGV நிறுவனத்தை பொறுத்தவரை கொரோனா காலகட்டத்தில் பெரிய அளவில் சரிவை  சந்தித்தது. ஆகையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நம்மில் பலர் Plague, Spanish Flu போன்று உலகையே அச்சுறுத்திய பல நோய்களை குறித்து நமது வரலாற்று பாட புத்தகத்தில் படித்திருபோம்.

ஒரு ஆய்வின்படி இது வரை மனிதகுலத்தை கொரோனா போன்ற கொடிய நோய்கள் 20-க்கும் அதிகமான முறை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சிலர் ஒவ்வொரு 100 வருடத்திற்கு இது போன்ற பேரழிவு ஏற்பட்டு வருகின்றது என்று கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : “மலேசிய சிங்கப்பூர் எல்லை விரைவில் திறக்கப்பட வேண்டும்” – வர்த்தகர்கள்..!

இந்த நோயின் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது என்றால் அது மிகையல்ல.

மலேசியா மட்டும் இல்லாமல் உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை அதிரடி வேலைநீக்கம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலேசியாவை தலமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் “FGV Holdings Berhad” நிறுவனம் தற்போது தங்களிடம் உள்ள 10 சதவிகித வெளிநாட்டு பணியாளர்களை (Foreign Workers) நீக்க முடிவு செய்துள்ளது.

தற்போது தங்களிடம் 90 சதவிகித வெளிநாட்டு தொழிலார்கள் அதிகமாக இருப்பதாக அந்நிறுவன நிர்வாக அதிகாரி டத்தோ ஹரிஸ் ஃபட்ஜிலா ஹசான் தெரிவித்துள்ளார்.

அவர்கள் குறைக்கவிருக்கும் 10 சதவிகித தொழிலார்இந்தியர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram